திருக்கழுக்குன்றத்தில், பேரூராட்சி நிர்வாகத்தின்கீழ் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து, மதுராந்தகம், திருப்போரூர் பகுதிகளுக்கு, பேருந்து இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் பிற வாகனங்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் எற்படுகிறது. இதனால், பேருந்து செல்வதற்கு குறுகிய பாதையை இருப்பதால், பேருந்து ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும், இங்குள்ள கடை முன் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதால், பேருந்து செல்ல வழியில்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
அரசுப் பேருந்து வராத நேரங்களில், ஷேர் ஆட்டோக்கள் பயணியரை ஏற்ற, நிலையத்திற்குள் சென்று காத்திருக்கின்றன.
செங்கல்பட்டு சாலையை ஒட்டி பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, திருக்கழுக்குன்றம் போலீசார், பேருந்து நுழைய, வெளியேற பாதையை தனியாக பிரித்து, தடுப்பு அமைத்தனர்.
மேலும், பேருந்துகள் தவிர்த்து, பிற வாகனங்கள் பேருந்து நிலையத்திற்குள் நுழையவும் தடை விதித்துள்ளனர்.