மதுராந்தகம்: அவசரகால ஒத்திகை விழிப்புணர்வு முகாம்

69பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டரை புதுச்சேரி கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தென்மண்டல குழாய் பாதைகள் நிறுவனத்தார் அவசரகால ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு முகாமை கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்தி காண்பித்தனர். இந்திய ஆயில் நிறுவனம் ஆயில் குழாய் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த குழாயில் இருந்து வாயு மற்றும் ஆயில் வெளியேறி அதன் மூலம் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டால் இதில் தீ கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் அவசரகால மருத்துவ முதலுதவிகள் குறித்தும் மற்றும் அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் செயல்முறை விளக்கத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக இந்திய ஆயில் நிறுவன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கொண்ட குழு, குழாய் பாதை தொடர்பான அவசர கால பேரிடர் கால ஒத்திகையை சிறப்பான முறையில் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திக் காண்பித்தனர். இந்த சிறப்பு முகாமில் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், மருத்துவக் குழுவினர் மற்றும் இதர அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி