திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 10 வது வார்டு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய திருப்போரூர் எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 10 வது வார்டு பகுதியில் 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் நியாய விலை கடை செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ருத்ரான்கோவில் அருகே உள்ள கடைக்கு தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நியாய விலை கடை வேண்டும் என்று திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜியிடம் பேரூராட்சி கவுன்சிலர் தௌலத் பீவி கோரிக்கை வைத்ததின் பேரில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12. 50 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் அடிக்கல் நாட்டு விழா பேரூராட்சி கவுன்சிலர் தௌலத் பீவி ஏற்பாட்டில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி கலந்துகொண்டு பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார் இங்கு கட்டப் போகும் நியாய விலை கடையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவர்.