நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, மஹாலட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் என்ற தீபக், 26, காரணைப்புதுச்சேரி பகுதியை சேர்ந்த நசீர் என்ற நஸ்ருதீன், 31. இவர்கள், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், மணிகண்டனின் ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை பெற்று, அவரது பெயரில் தனியார் வங்கியில், 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதில், 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை மணிகண்டனிடம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால், மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
பணத்தைக் கேட்டு மணிகண்டன் நெருக்கடி கொடுத்ததால், நஸ்ருதீன் அடியாட்களுடன் சென்று, கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக, மணிகண்டன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த போலீசார், நஸ்ருதீனை கைது செய்து, நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.