காஞ்சி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்

63பார்த்தது
காஞ்சி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு, தேர்தல் கமிஷன் வாயிலாக, இந்திய வருவாய் பணி அதிகாரி மதுக்கர் ஆவேஸ் என்பவர், செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், வேட்பாளர்களின் தேர்தல் செலவின விபரங்களை கண்காணித்து வருகிறார். இவரை தொடர்ந்து, ஐ. ஏ. எஸ். , அதிகாரி பூபேந்திரசவுத்ரி என்பவர் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், தேர்தல் பணிகள் அனைத்தையும் கண்காணிக்கிறார். இந்நிலையில், தமிழக அளவில், சிறப்பு செலவின பார்வையாளராக இந்திய வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் என்பவர் இப்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரை, 93452 98218 என்ற மொபைல் எண்ணில், அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் ஆகியோர் புகார் ஏதும் இருப்பின் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி