காஞ்சிபுரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

54பார்த்தது
காஞ்சிபுரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் அங்குள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் தொழிலகத்தில் இன்று காலை பணியின் போது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்பாக்கம் மண்டபம் கூட்டு சாலை பகுதியில் வசித்து வரும் குமார் , திருவண்ணாமலை மாவட்டம், மாங்கல்ய அடுத்த சோழவரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் துளை ஓட்டும் வேலை செய்து வருகிறார். மேலும் கல்குவாரி விடுமுறை நாட்களில் வீட்டின் எதிரில் உள்ள தினகரன் என்பவருக்கு சொந்தமான தீனா வாட்டர் சர்வீஸ் என்ற கடைக்கு சென்று சிறு சிறு வேலைகள் செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று கல்குவாரி விடுமுறை என்பதால் அவரது வீட்டின் எதிரே உள்ள தீனா வாட்டர் சர்வீஸ் கடைக்கு சென்று லாரி ஒன்றிற்கு வாட்டர் சர்வீஸ் செய்து விட்டு வாட்டர் கன் எடுத்து Stand - ல் வைக்க சென்றபோது அருகில் இருந்த Fuse Carrier -ல் மேற்படி Watter Gun -ல் பட்டு ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டார்.


உடன் பணிபுரிந்த ஊழியர் இதுகுறித்து அங்கு இருந்த பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் , 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
இச்சம்பவம் குறித்து மாகரல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கபட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி