காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, ரயில்வே சாலை வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், ஆடிசன்பேட்டை அருகில் உள்ள ரயில்வே சாலை, ராஜாஜி மார்க்கெட் அருகில் நின்று செல்கின்றன.
இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் பேருந்துக்காக காத்திருந்து, தாங்கள் பயணிக்க வேண்டிய பேருந்தில் பயணித்து வருகின்றனர்.
ஆனால், பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை வசதி இல்லை. இதனால், வெயில் மற்றும் மழையில் காத்திருக்கும் பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, ரயில்வே சாலை, ராஜாஜி மார்க்கெட் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.