டெல்லி- சென்னை- டெல்லி, மற்றும் மும்பை- சென்னை- மும்பை, ஆகிய 4 விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், இன்று ஒரே நாளில் ரத்து. கடந்த 3 நாட்களாக இதைப்போல் விமானங்கள், தொடர்ந்து ரத்து ஆவதால், பயணிகள் அவதி.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இன்று காலை 10. 30 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மற்றும் இன்று இரவு 7. 50 மணிக்கு, மும்பையில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 2 வருகை விமானங்களும், அதைப்போல் சென்னையில் இருந்து காலை 11. 15 மணிக்கு, டெல்லி புறப்பட்டு செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று இரவு 8. 30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 2 புறப்பாடு விமானங்கள், மொத்தம் 4 மும்பை, டெல்லி விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று, விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவன வட்டாரத்தில் விசாரித்த போது, நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதால், அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறுகின்றனர்.