வருவாய் ஆய்வாளர்கள் 12 பேர் பணியிட மாற்றம்

70பார்த்தது
வருவாய் ஆய்வாளர்கள் 12 பேர் பணியிட மாற்றம்
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில், தாசில்தார், துணை தாசில்தார், ஆய்வாளர்கள், உதவியாளர்கள் என பலரும் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், மாவட்டத்தில் மாங்காடு, படப்பை, மாகரல், உள்ளிட்ட பல்வேறு வருவாய் துறை அலுவலகங்களில் பணியாற்றி வரும், 12 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், உடனடியாக பணியில் சேர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி