காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 45 கி. மீ. , இருவழி சாலை உள்ளது. இந்த இருவழி சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்காக சாலை ஓரங்களில், தடுப்பு அமைத்தல், செடிகள் நடுதல், சிமென்ட் கற்கள் பதிக்கும் பணிகள் உள்ளிட்டவை நடந்து வருகின்றன.
குறிப்பாக, விஷகண்டிகுப்பம் ஏரி, பெரிய கரும்பூர் பேருந்து நிறுத்தம் ஆகிய சாலை ஓரங்களில், மண்ணை கொட்டி சாய் தளப்படுத்தி உள்ளனர்.
இந்த சாய்தளத்தின் மீது, ஏரிகளில் வெட்டி எடுக்கப்படும் புல், பதிக்கும் பணியை, சாலை விரிவாக்க தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல, தரைப்பாலங்களின் ஓரம் மற்றும் உயரமாக கொட்டப்பட்ட மண் மீது புல் தரை பதிக்கப்பட உள்ளது என, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், சாய் தளத்தில் பதிக்கப்படும் புல், துளிர் விட்ட பின், மழைக்காலங்களில் மண் அரிப்பை தடுக்க உதவும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.