கால்வாய் அமைக்கும் பணி கூத்திரம்பாக்கத்தில் அரைகுறை

57பார்த்தது
கால்வாய் அமைக்கும் பணி கூத்திரம்பாக்கத்தில் அரைகுறை
காஞ்சிபுரம் அடுத்த, கூத்திரம்பாக்கம் ஊராட்சியில், தொடூர் பிரதான தெரு, பஜனை கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. இதில், ஒரு சில தெருக்களில் மட்டுமே மழைநீர் வடிகால்வாய் வசதிஉள்ளது. சில தெருக்களில் அரைகுறையாக அமைத்துஉள்ளனர். குறிப்பாக, ஊராட்சி கிராம சேவை மைய கட்டடத்தில் இருந்து, தொடூர் கிராமத்திற்கு செல்லும் சாலை முகப்பு தெருவில் மழைநீர்வடிகால்வாய் வசதிஏற்படுத்தி உள்ளனர். பாதி தெருவில் இருந்து, மழைநீர் வடி கால்வாய் இன்றி காணப்படுகிறது.


இதனால், மழைக்காலங்களில் தெருக்களில் தேங்கும் தண்ணீர்வடிவதற்கு ஏற்ப, போதிய வடிகால்வாய் வசதி இல்லை. மழைநீர் தேங்கி கழிவு நீராக மாறும் நிலைஉள்ளது.


எனவே, கூத்திரம்பாக்கம் கிராம தெருக்களுக்கு, மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்என, கோரிக்கைஎழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி