செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் சார்பில் 70-வது மாநில ஆண்களுக்கான பூப்பந்தாட்ட பட்டயப்போட்டிகள் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை தனியார் தொலைக்காட்சி பிரபலம் KPY பாலா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்தார். மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 28 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டிகள் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.
சுமார் 30 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் நாக் அவுட் முறையில் வெற்றி பெறும் அணியினர் தமிழ்நாடு அணிக்கு தேர்வாகி இந்திய அளவில் நடைபெற உள்ள பூப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வில், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக மாநில செயலாளர் ஜெ. விஜய், மாநில துணை தலைவர் அ. சீனிவாசன், பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.