இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

56பார்த்தது
புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் கிட் , வாலிபால் கிட், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் வழங்கினார் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சூறை, புழுதிவாக்கம், அண்டவாக்கம், மையூர், பிலாப்பூர், ஜானகிபுரம், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு 20 அணியினருக்கு கிரிக்கெட் கிட், 15 அணியினருக்கு வாலிபால் கிட், இந்த விளையாட்டு வீரர்களுக்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர் சொந்த செலவில் கிரிக்கெட் கிட் வாலிபால் கிட் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் விஜி‌. குமரன் முன்னிலை வகித்தார். மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ‌மற்றும் அதிமுக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி