செம்பாக்கம் -- காட்டூர் சாலை 25 ஆண்டுக்கு பின் விமோசனம்

66பார்த்தது
செம்பாக்கம் -- காட்டூர் சாலை 25 ஆண்டுக்கு பின் விமோசனம்
தாம்பரம் அடுத்த மேடவாக்கத்தில் இருந்து, செம்பாக்கம் சுண்ணாம்பு கால்வாய் வரையுள்ள சாலை 30 கி. மீ. , நீளம் உடையது. இச்சாலைக்கு இடையே கோவிலாஞ்சேரி, பொன்மார், காயார், வெண்பேடு, காட்டூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன், சென்னை பெருநகர் சாலை மேம்பாடு திட்டத்தில், 30 கி. மீ. , சாலை, 6. 22 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு, 10 மீட்டர் அகலப்படுத்தப்பட்டது.

இதில், திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையை ஒட்டிய, செம்பாக்கம் சுண்ணாம்பு கால்வாய் -- காட்டூர் இடையே உள்ள 420 மீட்டர் வனப்பகுதி சாலை மட்டும் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தது.

இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மற்ற கிராமங்களில் சாலை அமைக்க, வனத்துறை அனுமதித்தது போல், காட்டூரிலும் சாலையை சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து நம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, சாலையை சீரமைக்க வனத்துறை அனுமதி வழங்கியது.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை, திருப்போரூர் பிரிவு சார்பில், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் திட்டத்தின் கீழ், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய சாலை அமைத்ததால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி