தமிழகத்தில், ஜனவரி மாதம் முழுதும், தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று (ஜனவரி 10) நடந்தது. இதில், தலைக்கவசம் அணிவதின் பயன் குறித்தும், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.