மழைநீர் வடிகால் கால்வாயில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள்

57பார்த்தது
மழைநீர் வடிகால் கால்வாயில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள்
உத்திரமேரூர் ஒன்றியம், பெரிய ஆண்டித்தாங்கல் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் வெளியேறுவதற்காக, பிரதான சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கால்வாயில் செடி, கொடிகள் மண்டி கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், வடகிழக்கு பருவமழை துவங்கி பலத்த மழை பெய்தால், பெரிய ஆண்டித்தாங்கல் பிரதான சாலையில் உள்ள வடிகால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.

எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பெரிய ஆண்டித்தாங்கல் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி