பெருச்சாளிகள் நடமாட்டம் அச்சத்தில் பஸ் நிலையத்தில் பயணியர்

67பார்த்தது
பெருச்சாளிகள் நடமாட்டம் அச்சத்தில் பஸ் நிலையத்தில் பயணியர்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், உத்திரமேரூர், செய்யாறு, , மதுராந்தகம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்துமிடத்தில், நகர பேருந்துகளுக்கான நேர காப்பாளர் அலுவலகம், பழைய தகரத்தால் செய்யப்பட்ட 'பங்க்' கில் இயங்கி வருகிறது.

இங்கு, காஞ்சிபுரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் நகர பேருந்துகள் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், பேருந்து நடையின்போது டிக்கெட் வசூல் தொகை உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகிறது.

தகரத்தால் செய்யப்பட்ட இந்த 'பங்க்' முறையான பராமரிப்பு இல்லாததால், கூரையிலும், அடிப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக்கு ஒழுகுவதால், ஆவணங்கள் மழையில் நனைந்து சேதமாகிறது.

பங்க்கின் உட்புற அடித்தளமான, தரைப்பகுதியில் ஓட்டை இருப்பதால் அதன் வழியாக உள்ளே வரும் பெருச்சாளிகள், வாசல் வழியாக வெளியேறுகின்றன.

பெருச்சாளிகள் நடமாட்டம் இருப்பதால், நேர காப்பாளர் அலுவலகத்திற்கு, பேருந்து இயக்கம் குறித்து பதிவு செய்ய வரும் ஓட்டுனர், நடத்துனர்கள், பேருந்தில் பயணிக்க விபரம் கேட்க வரும் பயணியர் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி