மதுராந்தகம் அருகே சூறாவளி காற்றால் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து சாலையில் சாய்ந்ததால் வாகனங்கள் சேதம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதலிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் சுமார் அரை மணி நேரமாக சாரல் மழை பெய்தது இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பூதூர் கிராமத்தில் கருங்குழியில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ள பனை மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சாலையில் விழுந்ததே அப்பொழுது மாநில நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த இருசக்கர வாகனம் எழுதிய பனை மரமானது விழுந்தது இதில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பானது ஏற்பட்டது இதை அடுத்து அப்ப கதிக்கு வந்த மின்வாரியத்துறை அதிகாரிகள் மதுரை துறை அதிகாரிகள் சாலையில் விழுந்த மின் கம்பம் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தினர்.