வண்டலுார் வரும் ஒட்டகச் சிவிங்கி, வரிக்குதிரை

67பார்த்தது
வண்டலுார் வரும் ஒட்டகச் சிவிங்கி, வரிக்குதிரை
வண்டலுார் பூங்காவிற்கு ஒட்டகச்சிவிங்கி மற்றும் வரிக்குதிரையை கொண்டு வருவதற்காக, கோல்கட்டா மற்றும்பன்னார்கட்டா வனவிலங்கு பூங்காக்களுக்கு, கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் அனுமதி பெற்று இவற்றை வண்டலுார் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, விலங்கு பரிமாற்ற திட்டத்தின்கீழ் உயிரியல் பூங்காக்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு பதில், இங்கு அதிகமாக உள்ள விலங்குகள், அந்தபூங்காக்களுக்கு அனுப்பப்படுகின்றன.

வண்டலுார் பூங்காவில், விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், சில ஆண்டுகளாக அதிகமான விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பல ஆண்டு முயற்சிக் குப்பின், சமீபத்தில் ஒரு ஜோடி காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டன.

தொடர்புடைய செய்தி