மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தனியார் கடற்கரை விடுதி அருகில், நேற்று காலை 7: 00 மணிக்கு, 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல், கடற்கரையில் ஒதுங்கியது. அவரை பற்றிய விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து, மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்துரை, மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடலைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.