செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

54பார்த்தது
அமித்ஷாவை கண்டித்து செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது

அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டை குறிக்கும் விதத்தில் மாநிலங்களவையில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை சொல்வது இப்பொது ஃபேஷன் ஆகிவிட்டதாகவும் அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திற்கு செல்ல உதவி இருக்கும் என்று கேலியாக விமர்சித்தார். இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தியும், அவரது சர்ச்சை பேச்சை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன செங்கல்பட்டில் வழக்கறிஞர் திடீரென சாலை மறியல் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி