செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பிற மத சகோதர சகோதரிகள் பங்கேற்ற சமூக நல்லிணக்க கேள்வி பதில் நிகழ்ச்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தணிக்கை குழு தலைவர் எம் எஸ் சுலைமான் கலந்து கொண்டு பிற மதம் சார்ந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான பதிலை வழங்கினார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலே பல்வேறு பகுதிகளிலே ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அடிப்படையான காரணம் இந்தியா போன்ற நம்முடைய தாய் நாட்டிலே அனைத்து சமுதாய மக்களும் வாழ்கிற நாட்டிலே சமூக நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் கல்பாக்கம் ஜமாத் சார்பில் ஏற்பாடு செய்துள்ளோம் நாங்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் ஜைனர்கள் பௌத்தர்கள் என்று இந்தியாவில் வாழுகின்ற பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இங்கு வருகிறார்கள். இங்கு வருகின்றபோது எங்களுடைய இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் அவர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு சமூக நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக வேண்டி வருகிறார்கள்.