சிலாவட்டம் திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

68பார்த்தது
சிலாவட்டம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த அக்னி வசந்த விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 18 தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கப்பட்டு மகாபாரத சொற்பொழிவு, வில்வளைப்பு, சுபத்திரை திருமணம், பாஞ்சாலி துகில், அர்ஜுனன் தபசு, கிருஷ்ணன் தூது, கர்ணன் மோட்சம் உள்ளிட்டவைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று திரௌபதி அம்மனின் வசந்த திருவிழாவான துரியோதனன் படுகளம் நடந்தது. இந்த நிகழ்வில் கோவில் அருகே களிமண்ணால் 25 அடி துரியோதனன் சிலை செய்து வைக்கப்பட்ட இடத்தில் பீமன் மற்றும் துரியோதனன் வேடமிட்ட. நாடக கலைஞர்கள் மகாபாரத்தில் போரிடும் போர்க்களக் காட்சி போல் தத்துரூபமாக நடித்து காண்பித்தனர். அதன்பின் திரெளபதி அம்மனுக்கு பூச்சூடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி