காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட உயிரியல் பூங்கா அருகில் உள்ள சிக்னல், சில நாட்களாக
வேலை செய்யவில்லை.
இதனால், இப்பகுதியில் வாகனங்கள் முறையாக செல்லததால், சாலையை கடப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அடிக்கடி வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்பதால்,
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பேருந்து மற்றும் மின்சார ரயில் மூலம் பூங்கா வரும் மக்கள், சாலையை கடந்து செல்ல சிரமம் அடைகின்றனர்.
எனவே, பழுதான சிக்னலை சீரமைத்து, சீரான போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.