உயர்த்தப்பட்ட அபராத தொகைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

73பார்த்தது
உயர்த்தப்பட்ட அபராத தொகைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்களிடம், அபராத தொகை உயர்த்தி வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுாப்பு துறை முதன்மை செயலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஒவ்வொரு மாதமும், ரேஷன் கடைகளில் மண்டல அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் சந்தை விலைக்கு அபராதம் தொகை வசூலித்து வந்தனர். இந்த விலை உயர்வு கடந்த மாதம் உயர்த்தப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, கூட்டுறவு துறை ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றத்தால், எட்டு வாரங்களுக்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை அனைத்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் தெரிவிக்க வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி