ஆலந்துார் காலி மனைகளில் துாய்மை பணிகள் தீவிரம்

178பார்த்தது
ஆலந்துார் காலி மனைகளில் துாய்மை பணிகள் தீவிரம்
ஆலந்துார் மண்டலத்தில் காலி மனைகள் அதிகம் உள்ளன. இவற்றில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

இவற்றில் விஷ ஜந்துகள் தங்கி, குடியிருப்புகளில் வலம் வருகின்றன.


இதனால், மண்டலம் முழுதும், 'மாஸ் கிளீனிங்' நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சுகாதாரத் துறையினர் மேற்பார்வையில், 'உர்பேசர்' நிறுவனம் சார்பில் துாய்மைப் பணியாளர்கள் கொண்டு, சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

உர்பேசர் நிறுவன மேலாளர் நாதன் கூறியதாவது:

ஆலந்துார் மண்டலத்தில், நாள் ஒன்றுக்கு இரண்டு வார்டுகள் வீதம், 'மாஸ் கிளீனிங்' நடத்தப்பட்டு வருகிறது.

இதில், வார்டு முழுதும் உள்ள காலி மனைகளில் தேங்கியுள்ள செடி, கொடிகள் அகற்றப்படுகின்றன. சுழற்சி முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இப்பணியில், 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரங்களில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகள் எடுக்கப்படுகின்றன. மின் கம்பிகளை உரசும் மரக்கிளை அகற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி