செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவை அலுவலர்கள் சங்க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட நில அளவை அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு இயக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் அனைவித பணிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடு வரையறுக்க வேண்டும், உதவி மற்றும் கூடுதல் இயக்குநரின் மண்டல துணை இயக்குநருக்கு மாற்றுவதை கைவிட வேண்டும், பணி சுமைகளை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டதில் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் அறி, மாவட்ட செயலாளர் பிரபு, உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஆண், பெண் அலுவலர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.