விமான நிலையத்தில் கஞ்சா கடத்தல்

74பார்த்தது
தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு வந்த விமானத்தில், அதிக போதை கொடுக்கக்கூடிய, பதப்படுத்தப்பட்ட, விலை உயர்ந்த ரூ. 65 லட்சம் மதிப்புடைய, 650 கஞ்சாவை கடத்தி வந்த பயணியை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி, அவர்கள் உடைமைகளை சோதனை செய்தனர்.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த யூசுப் மதீன் (50) என்பவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் அவரை நிறுத்தி விசாரித்தனர்.


அவரது சூட்கேசில்
உயர்ரக கஞ்சாவான அதிக போதை கொடுக்கக் கூடிய தாய்லாந்து, நேபாளம், சீனா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் விளையக்கூடியது, இந்த கஞ்சா. இதை பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். அதிக போதைக்காக இளைஞர்கள் சிலர் பயன்படுத்தும் இந்த கஞ்சா, ஒரு கிலோ ரூபாய் ஒரு கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதன்பின்பு சுங்க அதிகாரிகள், அந்த உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து, ஆய்வு நடத்தினர். அந்த கஞ்சா மொத்தம் 650 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 65 லட்சம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி