உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர்- - மெய்யூர்நெடுஞ்சாலையில், கரும்பாக்கம் அடுத்து குருமஞ்சேரி, சீட்டணஞ்சேரி கிராம சாலைகள் உள்ளன.
இருபுறமும் விவசாய நிலங்கள் கொண்டுள்ள இச்சாலை, மிகவும் குறுகியதாக உள்ளது.
இதனால், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், இந்த குறுகிய சாலையால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இச்சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, பினாயூர்- - மெய்யூர் சாலையில், குருமஞ்சேரி, சீட்டணஞ்சேரி வரையிலான மூன்று கி. மீ. , துாரம் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3. 41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்ட பணியாக, சாலையின் இரு புறங்களிலும் ஜே. சி. பி. , இயந்திரம் கொண்டு, விரிவுபடுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.