புதுப்பட்டினத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

75பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா புதுப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் ஏற்பாட்டில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவர் எம் தனபால் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தர்பூசணி நுங்கு இளநீர் மோர் சர்பத் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை முன்னாள் அமைச்சரும், மாநில மகளிரணி செயலாளருமான வளர்மதி வழங்கினார் நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சீனிவாசன் அதிமுக நிர்வாகிகள் எஸ்வந்த்ராவ் பக்தவச்சலம் ஒன்றிய செயலாளர்கள் விஜயரங்கன் செம்பூர் வேலு உள்ளிட்ட மாவட்டம் ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைத்து அணி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி