மகேந்திராசிட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து

63பார்த்தது
மகேந்திரா சிட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியான விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற தனியார் கல்லூரி பேருந்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் வயது 50. இவர் அவரது இரு சக்கர வாகனத்தில் மதுராந்தகம் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்றுள்ளார். 

அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மகேந்திரா சிட்டி அருகே வந்து கொண்டிருக்கும்போது அதிவேகமாக பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்து விட்டார். பின்பு அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்பு தகவலின் பேரில் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலையிலேயே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி