27 கோடிக்கு போதை பொருள் பறிமுதல்!

2261பார்த்தது
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கிலோ போதைப் பொருள் கொக்கையின் என்று உறுதியாக உள்ளதால், அதன் சர்வதேச மதிப்பு ரூ. 27 கோடி என்று மதிய வருவாய் புலனாய்வு துறை அறிவிப்பு.

லாவோஸ் நாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு நேற்று இரவு ஸ்கூட் விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் மூன்று கிலோ (2, 970 கிராம்) போதை பொருளை, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமி இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த அகமது இட்ரீஸ் (28) என்ற பயணியை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்தப் பயணி, இது போதைப் பொருள் அல்ல. உடலுக்கு சக்தியை கொடுக்கக்கூடிய, குளுக்கோஸ் வகை பவுடர் என்று வாதிட்டார்.ஆனாலும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சந்தேகத்தில் அதை, பரிசோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பினர்.

இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்னதாக, இரவு 7 மணி அளவில், பரிசோதனை கூடத்தில் இருந்து, ரிசல்ட் வந்துள்ளது. அதில் இது மிக அதிக வீரியம் கொண்ட கொக்கையின் என்று கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த கொக்கையின் போதைப் பொருளின் மதிப்பு, ரூ. 27 கோடி என்று மத்திய வருவாய் புலனாய் துறையினர் அறிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி