பயணியர் வருகை குறைவு 2 விமானங்கள் சேவை ரத்து

173பார்த்தது
பயணியர் வருகை குறைவு 2 விமானங்கள் சேவை ரத்து
போதிய அளவில் பயணியர் வருகை இல்லாததால், சென்னை - டில்லி விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டன.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், டில்லியில் மாலை 5: 35 மணிக்கு புறப்பட்டு, இரவு 8: 20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேரும்.

இந்த விமானம், இரவு 9: 05 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு 12: 05 மணிக்கு, டில்லி விமான நிலையம் சென்றடையும்.

இரு விமானங்களிலும் பயணிக்க போதிய பயணியர் இல்லாத காரணத்தால், இவற்றின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்திருந்த சொற்ப பயணியர், வேறு விமானங்களில் அனுப்பி வைத்ததாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி