காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி அமராவதிபட்டிணத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(32) தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம்(அக்.2) இரவு, ஒலிமுகமதுபேட்டையில் இருந்து, கீழம்பி நோக்கி, 'ஜாவா' இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, 'அசோக் லேலாண்டு' லாரியை, அதன் ஓட்டுனர் பின்னோக்கி எடுக்க முயன்ற போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் இறந்தார். பாலுச்செட்டிசத்திரம் போலீசார், மோகன்ராஜ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.