மொழி குறித்த தனது பேச்சுக்கு கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை. தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது? பொதுவெளியில் கமல் போன்ற ஒருவர் இப்படி பேசலாமா? அவரின் பேச்சு கன்னட மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு மதியம் வழங்கப்படும்" என நீதிபதிகள் கூறினர்.