கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் இன்று (ஜூன் 01) நலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நடிகர் கமலஹாசன் 2 தேர்தல்களில் போட்டியிட்டார். அப்போது அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். அவர் மாநிலங்களவை எம்பி பதவிக்காக திமுக கூட்டணிக்கு சென்று உள்ளார்" என விமர்சனம் செய்தார்.