கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என கமல் பேசிய விவகாரம் கர்நாடகாவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய், "முட்டாள்தனமான மற்றும் தேவையற்ற கருத்தை கமல்ஹாசன் பேசியுள்ளார். கன்னடம் தமிழை போலவே சிறந்த வரலாற்றைக் கொண்ட பாரம்பரிய மொழி. இரண்டையும் மதிக்க வேண்டும்" என்றார்.