கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் - வேட்பு மனுவில் தகவல்

51பார்த்தது
கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் - வேட்பு மனுவில் தகவல்
மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். நேற்று தலைமைச் செயலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு ரூ.49.67 கோடி கடன் இருப்பதாகவும், ரூ.59.60 கோடிக்கு அசையும் சொத்துக்களும், ரூ.245.86 கோடிக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறியுள்ளார். மகிந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் உள்ளிட்ட 4 கார்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி