கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. "தக் லைஃப்" பட விழாவில் கன்னட மொழி குறித்து கமல் பேசியது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, கன்னட சாகித்ய பரிஷத் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், கன்னட மொழி, கலாசாரம், நிலம், இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது