கள்ளக்குறிச்சி - சிபிஐ விசாரணை கோரிய மனு ஒத்திவைப்பு

84பார்த்தது
கள்ளக்குறிச்சி - சிபிஐ விசாரணை கோரிய மனு ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஜூலை 18க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக இன்பதுரை, பாமக கே.பாலு, பாஜக ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷஃபிக் அமர்வு வழக்கை ஜூலை 18க்கு ஒத்திவைத்தனர். மேலும், விஷச்சாராய மரண சம்பவம் தொடர்பாக மனுதாரர்களுக்கு அறிக்கை, பதில் மனுக்களை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி