உளுந்துார்பேட்டை நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு சாரதா ஆசிரமம் விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணை சேர்மன் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார்.
சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச பிரியா அம்பா ஆசிரியர் வழங்கி புத்தாடைகளை வழங்கினார். நகராட்சி கமிஷனர் இளவரசன் வரவேற்றார். நகராட்சி கவுன்சிலர்கள் ஜெயசங்கர், டேனியல்ராஜ், மாலதிராமலிங்கம், ராஜேஸ்வரிசரவணன், செல்வகுமாரி, பூபதி, கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.