உளுந்துார்பேட்டையில் கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். உளுந்துார்பேட்டை, கைலாசநாதர் குளக்கரையில் உள்ள கெங்கையம்மன் கோயிலில், நேற்று (ஜூன் 6) காலை அதிகாலையில் கடம்புறப்பாடும், காலை 8:00 மணிக்கு கோபுரகலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவில் அம்மனுக்கு சிறப்புअலங்காரத்துடன் வீதியுலா நடந்தது.