சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது: திருக்கோவிலூர் பகுதியில் விபத்துக்களை தவிர்க்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரில் 18 வயது நிரம்பாத சிறுவர்களிடம் தங்களின் இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது போக்குவரத்து சட்ட விதிகளின்படி வழக்கு பதிந்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சிறுவர்களை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க வேண்டாம். மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், 25 ஆயிரம் ரூபாய் வரை நீதிமன்றத்தின் மூலம் அபராதம் விதிக்க நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.