மோட்டார் சைக்கிள் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்

176பார்த்தது
மோட்டார் சைக்கிள் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் நேற்று முன்தினம் சுமார் 500-க்கும்
மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டையில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை கொள்கை விளக்க பேரணி நடைபெற இருந்தது.
இந்த பேரணிக்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போலீசார் எலவனாசூர்கோட்டையில் நடக்க இருந்த பா. ம. க.
சைக்கிள் பேரணியை தடுத்து நிறுத்தினர். இதனால் பா. ம. க. வினருக்கும், போலீசாருக்கும்
இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பேரணியை கைவிட்டு பா. ம. க. வினர் அனைவரும்
அங்கிருந்து கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி