உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் கடந்த மாதம் பல்வேறு வழக்குகளில் மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக புகார் கொடுத்தனர். இதன் மீது வழக்குப்பதிந்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விஜி சப் இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி, பெண் போலீசார் கலைவாணி மாலா ஆகியோர் மாயமான சிறுமியை கண்டுபிடித்து சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து எஸ்பி மோகன்ராஜ் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழை வழங்கினார்.