உளுந்தூர்பேட்டையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஞானாம்பிகை வித்யாலயா சி பி எஸ் சி பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் சேர்மன் முத்து குமாரசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டிஎஸ்பி மகேஷ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.