கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்ற வார சந்தையில் காட்டுசெல்லூர், வடக்குறும்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக வந்திருந்தது. இந்நிலையில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். மேலும், இன்று நடைபெற்ற வார சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.