ஓய்வு பெற்ற வன காப்பாளர்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம்

74பார்த்தது
ஓய்வு பெற்ற வன காப்பாளர்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம்
ஓய்வு பெற்ற வன காப்பாளர்கள், வன காவலர்கள், மிகைப்பணியிடை காவலர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் கெடிலத்தில் நடந்தது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான கூட்டத்திற்கு, சங்கத்தின் ஒருங்கிணைந்த தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். குடும்ப நிவாரண நிதியை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொருளாளர் கண்ணன், செயலாளர் சின்னசாமி, துணைத் தலைவர் லுார்துசாமி, ராஜேந்திரன், காளியப்பன், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you