சின்னசேலம் அருகே தம்பதியை தாக்கிய சகோதரர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த வாசுதேவனுார் கிராமத்தை சேர்ந்தவர் சோலைமுத்து, 50; இவர் கடந்த 24ம் தேதி உறவினர் வீட்டில் படுத்திருந்தார்.
அவரை, அதே ஊரைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன்கள் மணி, பாலு ஆகியோர் திட்டி தாக்கினர். தடுக்க முயன்ற சோலைமுத்துவின் மனைவி லட்சுமி, 45; மகன் விக்னேஷையும் திட்டி தாக்கினர்.
இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து மணி, பாலு ஆகியோரை தேடிவருகின்றனர்.