கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட , பிடாகம் ஊராட்சியில், பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை இன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேல், ஊராட்சி மன்ற தலைவர்,
திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.